கட்சியின் ஆயுள் தலைவராக ஜெகன் தேர்வு : விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

கட்சியின் ஆயுள் தலைவராக ஜெகன் தேர்வு : விளக்கம் கேட்ட தேர்தல் ஆணையம்

ஆந்திராவில் ஆளும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ், கட்சியின் ஆயுள் தலைவராக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் கேட்டுள்ளது.

ஆந்திராவில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவையடுத்து, அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டு  ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். அடுத்து வந்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடித்தார்.

இக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்ற இரண்டு நாள் கூட்டம் கடந்த ஜூலையில் தொடங்கியது. அப்போது கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவராக இருந்த ஜெகன் மோகனின் தாயார் விஜயம்மா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து மறுநாள் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆயுள் தலைவராக இருக்க ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளின் படி உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவரை தேர்வு செய்யப்படவில்லை என்பதால், தேர்தல் ஆணையம் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகவும், இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்