தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு ஆதரவு கடிதம்

தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு ஆதரவு கடிதம்

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம்  அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, பொதுசெயலர் தேர்வுக்கான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு கடிதம் பெறும் பணி நடந்துள்ளது.

 இந்த நிலையில், 2500க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு.

பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை ஈபிஎஸ் தரப்பில் அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் ஒப்படைக்கவுள்ளார். 

சுய விருப்பத்தின்படியும், முழு மனதுடன் தான் இடைக்கால பொதுச்செயலாளரை தேர்வு செய்தேன் என பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர். இந்த ஆதரவு கடிதம் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்