முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவால் காலமானார்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா  உடல் நலக்குறைவால் காலமானார்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர்.2000 வரை அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார். 

அதிமுக சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையேற்ற மத்திய அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்