அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் இன்று துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் இன்று துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.உணவின் மெனுவை அரசாணை வெளியிட்டுள்ளது .
அதில் குறிப்பிட்டிருப்பதாவது ;
திங்களன்று அரிசி, ரவை, சேமியா, கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உப்புமா + காய்கறி சாம்பார்
செவ்வாயன்று ரவை, சேமியா, சோளம் கோதுமை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் காய்கறி கிச்சடி
புதனன்று மாணவர்களுக்கு வெண் பொங்கல் அல்லது ரவை பொங்கல் + காய்கறி சாம்பார்
வியாழனன்று அரிசி, ரவை, சேமியா, கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளியன்று ரவை, சோளம், கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி+ரவை கேசரி, சேமியா கேசரி