1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது .
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது .
அதன் முதற்கட்டமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் .மேலும் மாணவர்களுடன் அமர்ந்து உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார் .
முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114-வைது பிறந்த நாளையொட்டி மதுரை ஏ.வி பாலம் -நெல்பேட்டை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதல்வர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார் .இந் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சில அமைச்சர்கள் ,திமுகவினர் பங்கேற்று இருந்தனர் .
மேலும் இதனைதொடர்ந்து நெல்பேட்டை பகுதியில் உள்ள காலை சிற்றுண்டி உணவு திட்டத்திற்கான சமையல் கூடத்தை பார்வையிட்டார் .அங்கிருந்து பள்ளிகளுக்கு சிற்றுண்டி உணவை கொண்டு செல்லும் வாகனத்தை தொடங்கி வைத்தார் .
இதனையடுத்து விருதுநகர் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ,அங்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார் .அதன் பின்னர் தனியார் ஆலை விருந்தினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் அவர் மாலை 5மணிக்கு திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்றும் விருதுகளை வழங்க போகிறார் .