காலை உணவு திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

காலை உணவு திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
காலை உணவு திட்டம் - இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மதுரையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 

தமிழக சட்டசபை பேரவையில் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலின்  அரசு பள்ளிகளில்  பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். அதன் முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும்  செயல்படுத்தப்பட உள்ளது’ என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் .

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினமான இன்று முதல் 45 ஆயிரத்து 545 அரசு தொடக்கப் பள்ளிகளில் இத் திட்டம் தொடங்கப்படுகிறது. 

இன்று காலை 8 மணிக்கு மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உணவு பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார் முதல்வர் ஸ்டாலின் .அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் பிற மாவட்டங்களிலும் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது .

மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த  ரூ.33.56 கோடி  நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது .

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com