ஓபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் வரவேற்பு

ஓபிஎஸ் கருத்துக்கு டிடிவி தினகரன் வரவேற்பு

அதிமுகவில் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்த ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் கடந்த ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்கூழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே இன்று காலை சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் அதிமுக மீண்டும் ஆட்சி வருவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஈபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த ஈபிஎஸ் அவர் மீது பல்வேறு குற்றங்களை அடுக்கியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்த ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற திரு.O.பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக சாடியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்