ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த ஈபிஎஸ்

ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த ஈபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வத்துடம் மீண்டும் இணைந்து எப்படி செயல்பட முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதனிடையே இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என ஈபிஎஸ்க்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி “அதிமுக இயக்கத்தை சிலர் தன் வசம் கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அதனை தடுக்கும் போது தான் சில பிரச்னைகள் உருவாகின்றன.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்க்குப் பின் இரண்டு அணியில் இருந்தவர்கள் 2017 ல் ஒன்றாக இணைந்தோம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அல்லாமல் அடிப்படை உறுப்பினர்களும் ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம்: செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும் என தெரிவித்தார்.

ஓபிஎஸ் அழைப்பு விடுத்த கேள்விக்கு பதிலளித்த ஈபிஎஸ் “அவர் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு விடுப்பார், யாரை எதிர்த்து தர்ம யுத்தம் சென்றாரோ அவருக்கும் சேர்த்தே அழைப்பு விடுக்கிறார். ஓபிஎஸ்க்கு அவருடைய மகன் மத்திய அமைச்சர் ஆக வேண்டும். வேறு யாரை பற்றியும் கவலையில்லை. ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீதி தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர், அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும்? திமுகவோடு உறவு வைத்துள்ளார் ஓபிஎஸ். அவரோடு இணைந்து எப்படி செயல்பட முடியும் என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.31%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.17%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்