ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

ஈபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்த ஓபிஎஸ்

மீண்டும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வருமாறு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் “அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. அவர் இருக்கும் வரை அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியவில்லை. மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சராக எம்.ஜி.ஆர் இருந்து வந்தார். எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஜெயலலிதாவும் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வந்தார். கடந்த ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் காரணமாகத்தான் திமுக ஆட்சிக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம் என தெரிவித்தார்.

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே எங்களின் உறுதியான நிலைப்பாடு என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் ”நடந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும்; கசப்புகளை தூக்கி எறிந்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எம்.ஜி.ஆரை திமுகவில் இருந்து வெளியேற்றியதனால் தான் அதிமுக உருவானது. திமுக, அதிமுக என்ற இரட்டை நிலைப்பாடு ஏற்பட்டபோது அதிக வாக்குகள் பெற்று அதிமுக தான் வெற்றி பெற்றது. 

அதிமுக ஜனநாயக ரீதியாக திமுக அரசுக்கு உரிய எதிர்க்கட்சியாக செயல்படும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து அதிமுகவை வழிநடத்தினோம். மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது எந்த தனி வெறுப்பும் இல்லை. கூட்டுத்தலைமை தான் அதிமுகவிற்கு சரியானது என்று உருவாக்கப்பட்டது. மேலும், சசிகலாவும், டிடிவி தினகரனும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.38%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    17.13%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்