ஆளுநரிடம் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை - சீமான்

ஆளுநரிடம் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை - சீமான்

ஆளுநரிடம் ரஜினி அரசியல் குறித்து பேசியதில் தவறில்லை; யார் வேண்டுமானாலும் ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசலாம் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மாலை முரசு நாளேட்டின் நிறுவனர் இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் “தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் பற்றுக்கொண்டவர் ராமச்சந்திர ஆதித்தனார். இரண்டு முறை அவரை இல்லத்தில் சந்தித்து இருக்கிறேன். மிகவும் எளிமையானர், துணிச்சல்மிக்கவர். ஈழப்போரில் நடைபெற்ற காலக்கட்டத்தில் செய்திகள் வெளியிட எல்லோரும் தயங்கிய போது இவர் செய்திகளை வெளியிட்டு பிறந்த இனத்திற்கு கடமையாற்றியவர்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார்? அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே? அப்போது அதனை சார்ந்த அதிகாரிகளும், தலைவர்களும் தானே அவரை சந்திப்பார்கள். அரசியல் என்பது ஒரு வாழ்வியல். அனைத்து இடங்களிலும் அரசியல் பேசுங்கள் என்று எப்போது சொல்கிறார்களோ அன்று தான் இந்த நாடு உருப்படும். ஆளுநரிடம் ரஜினி அரசியல் குறித்து பேசியதில் தவறில்லை; யார் வேண்டுமானாலும் ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசலாம் எனக் கூறினார். 

அரசியல் என்ற எண்ணம் இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் தானே ஆளுநர்! அப்போதுரஜினி ஆளுநரை சந்தித்து அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது. மேலும், ஆளுநருடன் அரசியல் பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

பொன்னியின் செல்வன்-1 படம் எப்படியிருக்கு?

  • ரொம்ப நல்லாருக்கு
    69.64%
  • எதிர்பார்த்த மாதிரி இல்ல
    16.99%
  • புத்தகம்-படம் வித்யாசம் இருக்கு
    13.38%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்