கோத்தபயா சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்குவதற்கான கால அவகாசத்தைச் சிங்கப்பூர் அரசு நீட்டிக்குமா ?

கோத்தபயா சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்குவதற்கான  கால அவகாசத்தைச் சிங்கப்பூர் அரசு நீட்டிக்குமா ?

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்னும் 2 வாரம் வரை சிங்கப்பூரிலேயே தங்குவார் என அரசியல் வட்டாரம் கூறி வருகின்றன .

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் ராஜபக்சே தான் காரணம் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன .கடந்த 9 ஆம் தேதி அதிபர் ராஜபக்சே பதவி விலகக் கோரி மக்கள் அதிபர் மாளிகையின் முன் மக்கள் தீவிர போராட்டம் நடத்தினர் .

இந்த நிலையில் அதிபர் ராஜபக்சே கொழும்பில் இருந்து மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார்.ஆனால் மாலத்தீவினரின் எதிர்ப்பால் அவர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார் .அதன் பின்பு அங்கிருந்து தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் .

அதனை அடுத்து இடைக்கால அதிபராக இருந்து ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் அதிபராகச் சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்டார் .

இந்தநிலையில் சிங்கப்பூர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த குடியேற்ற ஆணை அதிகாரிகளிடம் ,கோத்தபய சிங்கப்பூரில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த கேள்வி எழுப்பப்பட்டது .அதற்கு அதிகாரிகள் கூறுகையில் , கோத்தபய தனிப்பட்ட பயணமாகச் சிங்கப்பூருக்குக் கடந்த 14 -ஆம் தேதி வந்துள்ளார் .ஆகவே அவருக்குக் குறுகிய காலப்பயணமாகவே சிங்கப்பூர் அரசு தங்குவதற்கு 14 நாட்கள் அனுமதியளித்தது .

இந்த நிலையில் கோத்தபயாவின் பதவிக்காலம் வருகிற 11-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது .எனவே அவர் சிங்கப்பூரை விட்டு வெளியேற வேண்டும் .ஆனால் இலங்கையின் மக்கள் போராட்டம் இன்னும் ஓயாமல் தொடர்ந்து நடந்து வருகிறதால் ,மேலும் சில நாட்களுக்கு கோத்தபய சிங்கப்பூரில் தங்குவது நல்லது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது .

ஏற்கனவே 14 நாட்கள் தங்குவதற்குச் சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது கோத்தபயாவின் கால அவகாசத்தை மேலும் நீடிக்குமா என்று உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வருவதாகத் தகவல் வெளிவந்துள்ளன .

Find Us Hereஇங்கே தேடவும்