எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஈபிஎஸ்., ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை உயர்னேதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்குள் தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கும் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் அப்பீல் மனுவை விசாரிக்கும்போது தமது தரப்பையும் கேட்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்