முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கையிலிருந்து சிங்களர் ஒருவர் கடிதம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இலங்கையிலிருந்து சிங்களர் ஒருவர் கடிதம்

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இலங்கையிலிருந்து சிங்களவர் ஒருவர்  கடிதம் அனுப்பியுள்ளார் .

மேலும் இது தொடர்பாக அந்த சிங்களவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது ; 

ஐயா , 

நான் சிங்கள பௌத்தர் ,எனக்கு 63 வயது ஆகிறது .சபரகமுவா மாநிலத்தின் கேகாலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன் . எங்களுடைய பொருளாதார நெருக்கடி சூழலில் நீங்கள் அனுப்பிய 10 கிலோ அரிசியை நானும் என் மனைவியும் பெற்றுக்கொண்டோம் .

இதயநோயாளிகளாக வாழும் நானும் எனது மனைவியும் எமது பொருளாதார நெருக்கடியின் காரணமாக எனது சிறு சில்லறை வியாபாரத்தில் வீழ்ச்சியடைந்தோம்.

எனவே என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து உங்களுக்கு மிக்க நன்றி.மேலும் 

இலங்கை மக்கள் மீதான இரக்கத்திற்கு மிகுந்த நன்றி. அன்புடன், விஜிதா விக்கிரம சிரி என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்