பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை... கடலோர பாதுகாப்பு படை காவலர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு...!

பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை... கடலோர பாதுகாப்பு படை காவலர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு...!

பாய்மரப் படகு பயணத்தில் உலக சாதனை படைத்துள்ள கடலோர பாதுகாப்பு படை காவலர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு பாதுகாப்பு குழுமம் சார்பில் கடந்த மாதம் ”மரைன் போலீஸ் பாய்மரப்படகு பயணம் 2022” என்னும் பெயரில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள் பாய்மரப் படகுகள் மூலம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர். உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்டுகளில் இடம்பெறும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மீனவ மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து மண்டபம் வரை அதாவது 500 கடல் மையில் தூரத்திற்கு பாய்மரப்படகு பயணம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த பாய்மர பயணத்தை தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். தற்போது இந்த நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ”தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த 21 காவலர்கள் 3 பாய்மரப் படகுகள் மூலம் சென்னையிலிருந்து கடல் வழியே ராமேஸ்வரம் சென்று, மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இப்பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழ்நாடு காவல் துறையை மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. கடலோரப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் பணியில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வலியுறுத்துகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்