விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

விலைவாசி உயர்வைக் கண்டித்து  போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் கைது

விலைவாசி உயர்வைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

விலைவாசி உயர்வு , வேலையில்லா திண்டாட்டம் , பணவீக்கம் முதலிய பிரச்சனைகளைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றன .

இந்த நிலையில் விலைவாசி உயர்வு , வேலையில்லா திண்டாட்டம் பிரச்சனைகளைக் கண்டித்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்ற காங்கிரஸ் எம்.பிக்கள்,ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ,சசி தரூர் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்துள்ளனர் .

இதனைத்தொடர்ந்து டெல்லி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டனர்.மேலும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் அருகே பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடத்திய மகளிர் அணியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர் .

இதனால் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு - ஒழுங்கு சட்டம் கருத்தில் கொண்டு  144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

Find Us Hereஇங்கே தேடவும்