துணை ஜனாதிபதி தேர்தல் ;மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளித்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி

துணை ஜனாதிபதி தேர்தல் ;மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளித்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி

துணை ஜனாதிபதியின் எதிர்க்கட்சி வேட்பாளரான மார்கரெட் ஆல்வாவிற்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆதரவு அளித்துள்ளது .

துணை ஜனாதிபதியான வெங்கையா  நாயுடுவின் பதவிக்காலம் வருகிற 10-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் ,புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது .

துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜெகதீப் ஜன்கர் நிறுத்தப்பட்டுள்ளார் .எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி மார்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளித்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். 

அதோடு  தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் 16 எம்.பி.க்களும் அவருக்கு வாக்களிக்க அறிவுறுத்தப்படுகின்றன என்று சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்