முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக்கோரி முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்...!

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக்கோரி முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்...!

முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழையால் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்தத்தில் “ கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இடுக்கி உள்ளிட்ட கேரளாவின் பல மாவட்டங்களில் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) ஏற்கனவே ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதே நிலை நீடித்தால் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடுமையாக உயரும். 

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் நிலவும் அபாயகரமான சூழ்நிலையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, நீர் வெளியேற்றத்தை சீராக்கவும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி நீர் மட்டத்தை சீராகக் குறைக்க விரும்புகிறேன். மேலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் கனமழையைக் கருத்தில் கொண்டு, அணையில் இருந்து வெளியேறும் நீரானது உபரிநீரை விட அதிகமாக இருப்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஷட்டர்களை 24 மணி நேரத்திற்கு முன்பே திறப்பது குறித்து கேரள அரசிடம் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வதாக” குறிப்பிட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்