3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்… ஒருதலைப்பட்சமானது… கருணாஸ் கருத்து…!

3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்… ஒருதலைப்பட்சமானது… கருணாஸ் கருத்து…!
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்… ஒருதலைப்பட்சமானது… கருணாஸ் கருத்து…!

3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீஸ் ஒருதலைப்பட்சமானது என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீஸ் ஒருதலைப்பட்சமானது என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

அரசுக்கு எதிராக செயல்பட்டதாக பிரபு, ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகிய 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கூறிய கருத்தில், 3 அதிமுக எம்எல்ஏக்கள் மீதும் அந்த கட்சியின் கொறடா அளித்துள்ள புகாரின் பேரில் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

3 எம்எல்ஏக்களும் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியிருப்பது முரண்பாடாக தெரிகிறது.

வரக்கூடிய இடைத்தேர்தல் முடிவுகளை மனதில் வைத்துக் கொண்டு இவர்கள் மீது ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து என்பதைவிட மக்கள் கருத்தாக பதிவு செய்கிறேன் என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com