4 தொகுதி இடைத்தேர்தல்… 152 வேட்பு மனுக்கள் ஏற்பு!

4 தொகுதி இடைத்தேர்தல்… 152 வேட்பு மனுக்கள் ஏற்பு!

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்லுக்கான வேட்பு மனு தாக்கலில் 152 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்லுக்கான வேட்பு மனு தாக்கலில் 152 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் அவரக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அதன்படி 4 தொகுதகளிலும் மொத்தம் 152 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதில் அவரக்குறிச்சியில் 68 மனுக்களும், திருப்பரங்குன்றத்தில் 44 மனுக்களும், ஒட்டப்பிடாரத்தில் 18 மனுக்களும், சூலூர் தொகுதியில் 22 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com