3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து தி.மு.க. மனு அளித்துள்ளது.
3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து தி.மு.க. மனு அளித்துள்ளது.
அரசுக்கு எதிராக செயல்பட்டதாக விருத்தாச்சலம் தொகுதி அ.தி.மு.க. எம்எல்ஏ கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து விளக்கம் கேட்டு 3 எம்.எல்.ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தநிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான மனுவை சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் தி.மு.க. சார்பில் ஆர்.எஸ். பாரதி, கு.க.செல்வம், கிரிராஜன் ஆகியோர் அளித்தனர்.