நோட்டீஸ் என் கைக்கு கிடைக்கவில்லை. பிரபு எம்எல்ஏ பேட்டி…!

நோட்டீஸ் என் கைக்கு கிடைக்கவில்லை. பிரபு எம்எல்ஏ பேட்டி…!

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் என் கைக்கு கிடைக்கவில்லை என்ற கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கூறினார்.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ் இன்னும் என் கைக்கு கிடைக்கவில்லை என்ற கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கூறினார்.

அதிமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கலைச்செல்வம், பிரபு, ரத்தின சபாபதி ஆகிய ஆகிய 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுபற்றி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கூறுகையில், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன். 7நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. 

நோட்டீஸ் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை. அமமுக கட்சி அதிமுகவின் ஒரு பிரிவாக இருந்தது. இப்போது தான் தனிக்கட்சியாக செயல்படுகிறது. அ.தி.மு.க. தான் எனது கட்சி. ஆனால் நான் சசிகலா அணியில் இருக்கிறேன் என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com