வேட்டி யாருக்கு என்று தங்கள் யுத்தத்தை தொடங்கி உள்ளனர்.
தங்கள் கட்சிக் கொடியின் மாதிரியையும், தங்கள் கொடிக்கு நடுவே, தங்கள் கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் படத்தையும் அமமுகவினர் பயன்படுத்துகிறார்கள் என்றும், தங்கள் கட்சிக்காரர்கள் போன்று கரை வேட்டி கட்டுகிறார்கள் என்றும், இதை அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆட்சேப மனு அளித்துள்ளார்.
இதற்கு அமமுக தரப்பில் கூறும்போது, திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்துவந்து கட்சி ஆரம்பித்தபோது, திமுக கொடிக்கு நடுவே அண்ணா படத்தை போட்டார். அதேபோல், நாங்கள் கருப்பு சிவப்பு கொடிக்கு நடுவே சற்று பெரிய அளவில் வெள்ளை நிற இடத்தில் ஜெயலலிதா படத்தைப் போட்டுள்ளோம். இதை தடுப்பதற்கு சிவி சண்முகத்திற்கோ, வேறு யாருக்கோ உரிமை இல்லை என்று கூறுகின்றனர்.
கட்சியின் பெயர், கட்சியின் சின்னம் என்று கோர்ட்டுக்கும், தேர்தல் ஆணையத்துக்குல் அலைந்தவர்கள், அடுத்து வேட்டி யாருக்கு என்று தங்கள் யுத்தத்தை தொடங்கி உள்ளனர்.