33 தொகுதிகளில் வெற்றி! ப.சிதம்பரம் கணிப்பு!!

33 தொகுதிகளில் வெற்றி! ப.சிதம்பரம் கணிப்பு!!

திமுக, காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றி பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி  33 தொகுதிகளில் வெற்றி பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிடிஐ செய்தியாளருக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ராகுல் காந்தி பிரதமராக வருவாரா என இப்போதே சொல்லமுடியாது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பிரதமரை தேர்வு செய்வார்கள். தமிழகத்தில் 33 மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com