ஆசிய தட களப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய தட களப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் தலைநகர் தோகாவில், 23ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, தங்கம் வென்றார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதிக்கு அதிமுக சார்பில் 15 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்றும், வெள்ளிப்பதககம் வென்ற ஆரோக்கியராஜுக்கு 10 லட்சமும் வழங்கப்படும் என்றும் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.