சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவிருக்கிறது.
சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதிமுக கொடியின் நிறத்தையும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தையும் அமமுகவினர் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அதிமுக கட்சியின் நிறம் கொண்ட வேஷ்டிகளை அமமுகவினர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கும் தடை விதிக்கக்கோரி, புகார் மனு அளித்திருப்பதாகவும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.