காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரகசியமாக பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்.பி வலியுறுத்தியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ரகசியமாக பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்.பி வலியுறுத்தியிருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவர் இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து குடியுரிமையையும் பெற்றிருந்ததாக சுப்ரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 2003ம் ஆண்டு முதல் 2009 வரை இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த பேக்உப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் செயலாளராக ராகுல்காந்தி இருந்ததாகவும்,அந்த ஆவணங்களில் தன்னை பிரிட்டிஷ் குடிமகன் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுப்ரமணியன் சுவாமி அளித்த புகார் மனுவையும் இணைத்து உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி உரிய விளக்கம் தரும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.