அதிமுக பொதுக்குழு விவகாரம் - தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புகார்...!

அதிமுக பொதுக்குழு விவகாரம் - தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புகார்...!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பொதுக்குழுவிற்கு எதிராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி பூசல் விவகாரம் உச்சத்தை தொட்ட நிலையில் அதிமுகவில் அடுத்தடுத்து நிகழும் மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றை தலைமை பிரச்னை அதிமுகவின் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமிற்கு உரிமை இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் செயற்குழுவோ அல்லது பொதுக்குழுவோ நடத்தப்பட்டால் அக்கட்சியின் பொதுச்செயலாளரோ அல்லது ஒருங்கிணைப்பாளரோ கட்சியின் நடவடிக்கை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் அறிக்கை அளிக்க வேண்டும். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த 12ம் தேதி செப்டம்பர் மாதம் 2017ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கட்சியின் திருத்த சட்டப்படி ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 5 ஆண்டுகள் செல்லுபடியாகும். இந்த விதியின்படி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரை நீக்கவோ, விதிகளில் திருத்தம் செய்யவோ கட்சி தொண்டர்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. இந்நிலையில் பொதுக்குழுவில் 23 தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் பொதுக்குழு கூட்டத்தில் இந்த 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை அங்கீகரிக்காததால் ஜூன் 23ல் நடந்த பொதுக்குழு செல்லாது. மேலும் அவைத்தலைவர் தேர்வும் செல்லாது. பொருளாளர் என்ற முறையில் கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

மேலும், கடந்த 26ம் தேதி இரவில் கட்சி தலைமையகம் பெயரில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக அறிக்கை வெளியானது. இதில் எந்த கையெழுத்து இடம்பெறவில்லை. தலைமை அலுவலக செயலாளர் பெயரில் வெளியாகி இருந்தது. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்த அனுமதியில்லை. மேலும் ஜூலை 11ம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பும் உரிய முறையில் கூட்டப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளார். 

Find Us Hereஇங்கே தேடவும்