தொடரும் லாக்கப் மரணங்கள், சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதா? - அண்ணாமலை கேள்வி

தொடரும் லாக்கப் மரணங்கள், சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதா? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் தொடந்து நடைபெற்று வரும் லாக்கப் மரணங்கள் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு கட்டுப்பாடு பற்றிய சந்தேக்கத்தை எழுப்புவதாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லாக்கப் மரணங்கள் சட்ட ஒழுங்கு கட்டுப்பாடு பற்றிய சந்தேகத்தை எழுப்பவதாக இருக்கிறது என அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பகுதியில் கருத்து தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில், "கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்ற அஜித் என்ற 22 வயது இளைஞர் காவல் நிலையத்தில் வைத்தே சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. இறந்தவர் குடும்பத்திற்கு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்.

இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுத்தால்  மட்டும் போதாது. இறந்தவரின் தாயின் வேதனையை போக்க யாராலும் இயலாது. மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து லாக்கப் மரணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திமுக ஆட்சியமைத்த நாள் முதல் லாக்கப் மரணங்கள் தொடர்கதை ஆகிவிட்டன. 

இதுபோன்ற சம்பவங்களால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி குற்றவாளிகள் தண்டனை பெற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்