யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் ஆதரவு

யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் ஆதரவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின்  வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குக் காங்கிரஸ்,திரிணமூல் காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா-வை  நிறுத்தியுள்ளனர் . இதற்கான வேட்புமனு தாக்கலை யஷ்வந்த் சின்ஹா இன்று அளித்துள்ளார் . 

இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி  , ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவு யாருக்கென்று அறிவிக்காமலிருந்த நிலையில் ,  ராஷ்டிர சமிதி கட்சி தனது ஆதரவு யஷ்வந்த் சின்ஹா என தெரிவித்துள்ளனர் . 

இது குறித்து தெலுங்கானா ராஷ்டிர  சமிதி கட்சியின் மூத்த தலைவர் கே.டி.ராமா ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் , 

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் , குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளார்.அதோடு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களுடன் இன்றய வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளேன் என்று கூறியுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்