அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது நிர்வாகியும் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் தகவல் தெரிவி
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவரது நிர்வாகியும் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார் .
ஓபிஎஸ் நிர்வாகியும் ஆதரவாளருமான கோவை செல்வராஜ் இன்று சென்னை செய்தியாளர்களிடம் பேசியதில் ,
ஓபிஎஸ்-யின் கையெழுத்து இல்லாமல் ஒற்றைத் தலைமை பொதுக்குழு நடத்துவது என்பது கனவாகத் தான் இருக்கும் .அதோடு அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் உள்ளார்கள் .ஆனால் பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் எந்தவொரு புகாரும் தரவில்லை .
அவர் டெல்லி சென்றதுக்குக் கரணம் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரிக்கத்தான் . அதுவும் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் நாட்டாவின் வேண்டுகோளை ஏற்று , குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிப்பதாக டெல்லி சென்று வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்டார் .
இன்று அவர் சென்னை வந்த பிறகு ஒரு சில முடிவுகளை எடுக்கப் போகிறார் . அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்திய நிலையில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரித்து விட்டன . அதனால் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் வருகிற ஜூலை 11 -ஆம் தேதி நடக்க இருப்பதாகக் கோவை செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார் .