விழுப்புரத்தை தொடர்ந்து சென்னையிலும் அதிமுக சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ்-ன் பெயர் பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தை தொடர்ந்து சென்னையிலும் அதிமுக சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ்-ன் பெயர் பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் மற்றும் பெயர் அழிக்கப்பட்டது.
மேலும் நகரில் உள்ள சுவர் விளம்பரங்களிலும் ஓபிஎஸ் பெயரை அழிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் அண்ணா மேம்பாலம் அருகே தனியார் சுவரில் அதிமுகவின் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் சார்வில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் ஓபிஎஸ்-ன் பெயர் கருப்பு பெயிண்ட் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையிலும் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபடாத நிலையில் அவருடைய படம் மற்றும் பெயரை அழிப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.