ஜூலை 11- இல் அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம்

ஜூலை 11- இல் அதிமுகவின்  அடுத்த பொதுக்குழுக் கூட்டம்

அதிமுகவின் அடுத்த பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 11 - ஆம் தேதி நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார் .

அதிமுக ஒற்றைத்  தலைமை பொதுக்குழுக் கூட்டம்  சென்னையை அடுத்துள்ள வானகரத்தில்  உள்ள ஸ்ரீ வாரு மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது . அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அனைத்து பொது தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொடுக்குமாறு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார் . அதனை  அடுத்து மேடைக்கு வந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்  அனைத்து தீர்மானங்களையும் நிராகரித்துவிட்டார் .

மேலும் ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்தோடு அடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் .அந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை என்ற தீர்மானத்தோடு சேர்த்து  23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார் .

இதையொட்டி  பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனிடம் வழங்கிய பின் , சி.வி. சண்முகம் மீண்டும் பொதுக்குழுக் கூட்டம் வேண்டும் எனவும் இரட்டைத்  தலைமை நிராகரித்து ஒற்றைத்தலைமை வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் .

Find Us Hereஇங்கே தேடவும்