விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி...!

விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி...!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரேமலதாவிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டார். தற்போது அவர் வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். மேலும், உடல்நிலை பாதிப்பு காரணமாக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்த நிலையில் மீண்டும் உடல்நலக் குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 14 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பிரேமலதாவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். மேலும், விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்