ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் பூதாகரமான எழுந்துள்ள நிலையில் அதிமும மற்றும் செயற்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுவை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.  இந்த மனுவானது இரவோடு இரவாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயணன் ஆகியோரும், பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன் , திருமாறன் ஆகியோரும் ஆஜராகினர்.

பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால் 23 புதிய தீர்மானங்களை தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என தெரிவித்தனர். இதனால் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாது என்ற மகிழ்வில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு செல்வதற்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டு அதனை தலைவணங்கி ஏற்றிக்கொள்கிறோம். கட்சியை பொறுத்தவரை எப்போதும் பின்னடைவு என்பது இல்லை. கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் எடுத்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார். மேலும் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கலந்து ஆலோசனை செய்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Find Us Hereஇங்கே தேடவும்