தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தமிழகத்திலிருந்து  2- வது கட்டமாக இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

இலங்கைக்கு இரண்டாவது கட்டமாகத் தமிழகத்திலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்களின் நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .அதனால் தமிழகத்திலிருந்து கப்பலில்  இலங்கைக்கு  நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பாக  அத்தியாவசிய பொருட்கள் , மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் எனச் சட்ட சபையில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் .

அதன் முதற்கட்டமாகச் சென்னையிலிருந்து கடந்த மாதம் கப்பல்  மூலம் 9,500 டன் அரிசி , 200டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது .

இதன் தொடர்ச்சியாக  இரண்டாவது கட்ட நிவாரணப் பொருட்கள்  தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவித்தன .அதன் படி தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்துக்குப் புறப்பட்டுச் செல்கிறது . 

இந்த கப்பலில் 14 ஆயிரத்து 700 டன் அரிசி , 250 டன் பால் பவுடர் , 50 டன்  மருந்து பொருட்கள் உள்ளிட்ட மொத்தம் 15 ஆயிரம் டன் நிவாரணப் பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

மேலும் இதனைத் தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு  தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கப்பல்  மூலம்  அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள

Find Us Hereஇங்கே தேடவும்