பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஓபிஎஸ்!

பொதுக்குழு  தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஓபிஎஸ்!

பொதுக்குழு  தீர்மானங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளிக்கவில்லை.

தீர்மான குழுவால் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ள 23 தீர்மானங்களின் வரைவு நகல் அதிமுகவின் முதன்மை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை வகிப்பவர் என்ற வகையில் ஓ. பன்னீர் செல்வத்தின் ஒப்புதலுக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணிக்குள் ஒப்புதல் அளித்து இருக்கவேண்டிய ஓபிஎஸ் அந்த தீர்மானங்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதற்கிடையே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் திரண்டு ஓபிஎஸ் வாழ்க என்றும் ஒற்றை தலைமைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Find Us Hereஇங்கே தேடவும்