நாமக்கல்: 12ம் வகுப்பு தேர்வில் சதம் அடித்த 8 பள்ளிகள்..!

நாமக்கல்: 12ம் வகுப்பு தேர்வில் சதம் அடித்த 8 பள்ளிகள்..!

நாமக்கல் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வில் 8 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மே-2022 மேல்நிலைப் பொதுத் தேர்வில் 200 பள்ளிகளை சார்ந்த 9,392 மாணவர்களும் 9,705 மாணவிகளும் ஆக மொத்தம் 19,097 பேர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். இதில் 8,725 மாணவர்களும் 9,359 மாணவிகளும் ஆக வெல்லும் மொத்தம் 18,084 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி 92.90% மாணவிகள் 96.43% ஆக மொத்தம் 94.70% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், மாநில அளவில் 16-ஆம் இடத்தை பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டதில் 89 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் 4,437 மாணவியர்கள் 4,802 மொத்தம் 9,239 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 3,858 மாணவிகள் 4,522 ஆக மொத்தம் 8,380 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 90.70% ஆகும்.

நாமக்கல் மாவட்டத்தில் 5 பழங்குடியினர் பள்ளிகளை சார்ந்த 167 மாணவர்கள் 154 மாணவிகள் ஆக மொத்தம் 321 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 134 மாணவர்கள் 138 மாணவிகள் ஆக மொத்தம் 272 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 84.73% ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் களங்காணி அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் 37 மாணவர்கள் 48 மாணவிகள் மொத்தம் 85 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 36 மாணவர்கள் 46 மாணவிகள் ஆக மொத்தம் 82 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 96.47% ஆகும். இவ்வாண்டு 72 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசுப் பள்ளிகள் 8 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்