ஈழத்தமிழர்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஸ்டாலின் உறுதி..!

ஈழத்தமிழர்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஸ்டாலின் உறுதி...!

பொருளாதார நெருக்கடி காரணமாக , இலங்கைத் தமிழர்கள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

ஜூன் 20-ஆம் தேதி உலக அகதிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது .இலங்கைத் தமிழர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  முதல்வர் ஸ்டாலின் தனது டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது ;

ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள்,உலக அகதிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழரின்  வாழ்வியல் மரபு ஆகும் .

உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் டிவிட்டரில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார் .

Find Us Hereஇங்கே தேடவும்