ஓபிஎஸ் மீது கட்சி விரோத ஒழுங்கு நடவடிக்கை - ஈபிஎஸ் ஆதரவாளர் வலியுறுத்தல்

ஓபிஎஸ் மீது கட்சி விரோத ஒழுங்கு நடவடிக்கை  - ஈபிஎஸ் ஆதரவாளர் வலியுறுத்தல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மீது கட்சி விரோத ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சேலம் அதிமுக வழக்கறிஞர் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதிமுகவில் இருந்து பெங்களூர் புகழேந்தி நீக்கப்பட்ட போது  அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் அவருடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கட்சியின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் கையெழுத்திட்டிருந்தனர். 

ஆனால், அதற்கு மாறாக நேற்று புகழேந்தி ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆலோசனை நடத்தியிருப்பது கட்சி விரோதம் என்றும் கட்சி விரோதமாக நடந்துகொண்ட ஓபிஎஸ் மீது கட்சி விதிமுறைகளின்படி பாரபட்சம் இல்லாமல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சேலம் அதிமுக வழக்குரைஞரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான நிலவாரப்பட்டி மணிகண்டன் அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இது அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிகண்டனின் இந்த கோரிக்கையை அடிப்படையாக வைத்து ஓபிஎஸ் மீது அடுத்த நடவடிக்கையை எடுக்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Find Us Hereஇங்கே தேடவும்