2026 ல் தமிழகத்தில் பாமக ஆட்சி - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

2026 ல் தமிழகத்தில் பாமக ஆட்சி - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
2026 ல் தமிழகத்தில் பாமக ஆட்சி - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

2026-ல் பாமக ஆட்சி அமைக்க அனைவரும் ஒற்றுமையாக அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2026-ல் பாமக ஆட்சி அமைக்க அனைவரும் ஒற்றுமையாக அர்ப்பணிப்போடு செயலாற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட  என் மீது  நீங்கள் கொண்டுள்ள அன்பு, பாசம், மரியாதை, நம்பிக்கை அனைத்துக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தமிழ்நாட்டு மக்களைக் காக்க மதுவிலக்கு, இளைஞர்களைக் காக்க போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, விவசாயிகளின் நலனுக்காக நீர் மேலாண்மை, வேளாண் வளர்ச்சி, நாட்டைக் காக்க சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் தணிப்பு, மக்களின் நலனுக்காக கல்வி, சுகாதாரம், விவசாயம், அரசு நிர்வாக சீரமைப்பு, தொழிலாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என நாம் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன.

பா.ம.க. 2.0 என்ற புதிய செயல் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். அதை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம். 2026-ல் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி நடக்கும். அதற்காக எல்லோருடனும் இணைந்து ஒற்றுமையாக அர்ப்பணிப்போடு செயலாற்றுவோம்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக எனக்கும், நிர்வாகிகளாக உங்களுக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் அளித்திருக்கும் பணி ஒன்றுதான். “அந்த பணியை செய்து முடிப்பதற்காக இன்று முதல் நாம் அனைவரும் கைகோர்த்து உழைப்போம் வாருங்கள்” என்று பாட்டாளி சொந்தங்கள் அனைவரையும் அழைக்கிறேன். கட்சியில் நீங்கள் வேறு நான் வேறு அல்ல. நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உழைப்போம். 2026&ஆம் ஆண்டில்  மக்கள் நம்மை ஆட்சியில் அமர்த்துவர். நாற்பத்து மூன்று ஆண்டுகால பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இன்று வரை சமூக நீதிக்காக போராடும் மருத்துவர் அய்யா அவர்களுடைய லட்சியங்களை நிறைவேற்ற எழுச்சியுடன் பணியாற்றுவோம்.

இப்போது எனது எண்ணம் முழுவதும் நிறைந்திருப்பது நீங்களும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றமும் தான். உங்களுடன் நான் இருக்கிறேன் உங்களை நான் வழி நடத்துகிறேன். நேர்மையான அரசியலை நடத்துவோம்.நான் எந்த முடிவு எடுத்தாலும் அது நமது கட்சி மற்றும் நமது தமிழகத்தின் நலன் சார்ந்தே இருக்கும். அதற்கு நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அப்பொழுதுதான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com