மக்களுக்கு பயனளிக்கும் எனில் புதிய யுக்திகளை கொண்டு வர வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு பயனளிக்கும் எனில் புதிய யுக்திகளை கொண்டு வர வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மக்களுக்கு பயனளிக்கும் எனில் புதிய யுக்திகளை கொண்டு வர வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய யுக்திகளை அவை எங்கிருந்தாலும் மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால் அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்

புதிய யுக்திகளை அவை எங்கிருந்தாலும் மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால் அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று  முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடனான இரண்டாம் நாள் ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது துறை ரீதியான கோப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “ உலகம் முழுவதையும் முடக்கிப் போட்ட கொரோனா பெருந்தொற்று, வரலாறு காணாத மழை, வெள்ளம் மற்றும் மோசமான நிதி நிலைமை என்று ஒரே நேரத்தில் பல சவால்களை நாம் எதிர்கொண்டு, அதில் ஓரளவிற்கு குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளோம். மக்கள் நலன் கருதியும், மாநிலத்தை ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும் பல்வேறு அறிவிப்புகளை  கடந்த ஆண்டு அறிவித்திருந்தேன். அதில் சில திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள கால தாமத்தை ஆராய்ந்து விரைவில் அரசாணை வெளியிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தை விரிவுபடுத்தி, இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட வேண்டும். புதிய தொழில்கள் தொடங்கப்படுவதை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் விதமாக  உழவர் சந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதிலும், புதிய பயிர் வகைகளை அறிமுகப்படுத்துவதிலும், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய Agricultural Marketing அந்தத் துறையை பலப்படுத்திடவும், உழவர் உற்பத்தியாளர் குழுக்களை பெருமளவில் அமைக்க வேண்டும். தமிழக மக்கள் இந்த அரசின் மீது வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில், ஒவ்வொரு துறையும் செயலாற்ற வேண்டும்.

மேலும், புதிய யுக்திகளை, அவை எங்கிருந்தாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால், அதை நம் மாநிலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். அப்படி நீங்கள் செய்தால், உங்களை ஊக்குவிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது.  ஒவ்வொரு துறைத் தலைவரும், தங்கள் அமைச்சருடன் இணைந்து, தனது துறையில் செம்மையாகச் செயல்பட்டு, வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்தையும், குறிப்பிட்ட காலத்திற்குள். குறிப்பிட்ட நிதி ஒதுக்கீட்டிற்குள் நிறைவேற்றிட வேண்டுமென்று” அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com