திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்
திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் 400 ஆண்டுகளுக்குப்பின்னர் வரும் ஜூலை மாதம் 6.ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயிலில் பல்வேறு பணிகள் நடந்து வரும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு வருகை தந்தார். அவரை கோயில் மேலாளர்  மோகன் குமார் வரவேற்றார்.  கன்னியாகுமரி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் ஞான சேகர், மராமத்து பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன், குழித்துறை தேவஸ்வம் சூப்பிரண்டு ஆனந்த், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரி வீரராகவன் ஆகியோர் கோயிலில் நடந்து வரும் பணிகள் குறித்து கூறினர்.

பின்னர் கோயில் கொடி மரப்பணிகள், மியூரல் பெயிண்டிங் வேலைகள், கருவறை ஒற்றைக்கல் மண்டப பணிகள், மராமத்துப்பணிகளை பார்வையிட்ட மனோ தங்கராஜ் நிருபர்களிடம் பேசும்போது,”தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக அதன் பணிகளை செய்து வருகிறது. கோயில்கள் நிறைய புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகங்கள் நடந்து வருகிறது. நானூறு ஆண்டுகளுக்குப் பின்னர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்துக்கான வேலைகள் முடுக்கி விடப்பட்டு முழு வீச்சில் நடந்து வருகிறது. கோயில் கும்பாபிஷேகம் சிறப்புற நடந்து முடிந்ததும் திருவட்டார் மேலும் சிறப்புகள் பல பெறும். ஓவியங்கள் குறித்து புகார் தெரிவித்துள்ளார்கள். இதுதொடர்பாக தொல்லியல்துறையினர் பழமை மாறாமல் ஓவியங்களை புதுப்பிக்க வேண்டும் என்று கூறியதால் இப்படி வரைந்ததாகவும், மேலும் அரைகுறையாக உள்ள படங்களில் முழு வடிவம் எங்கேயாவது கிடைக்குமானால் அதைக்கொண்டு வந்து ஓவியத்தை முழுமைப்படுத்தலாம் எனவும் தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், கோயிலில் திருட்டு போன நகைகளை மீட்க ஒருபுறம் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வந்தாலும் நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்காமல் 10 கோடி ஒதிக்கீடு செய்து பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க தங்க அங்கி சாத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்று பணிகள் நடைபெறுவது சிலருக்கு ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால் அவதூறு பரப்பி வருகின்றனர். இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது. தற்போது சட்டசபையிலேயே அறநிலையத்துறை அமைச்சர் கோயிலில் ஆதிகேசவப்பெருமாளுக்கு தங்க அங்கி செய்வதற்காக ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதற்கான வேலைகள் விரைவில் துவங்கும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com