அண்ணாமலை மலிவான அரசியல் செய்கிறார் – துரைவையாபுரி!

அண்ணாமலை மலிவான அரசியல் செய்கிறார் – துரைவையாபுரி!

அண்ணாமலை மலிவான அரசியல் செய்கிறார் – துரைவையாபுரி!

அண்ணாமலை, அர்ஜூன் சம்பத் ஆகியோரின் அறிக்கைகள் ஒரு மலிவான அரசியல் நடத்துவது போல இருப்பதாக மதிமுக., தலைமைக் கழக செயலர் துரைவையாபுரி கூறினார்.

சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய  துரைவையாபுரி, பேசும் போது, மத்திய அரசின் குறைகளை, செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. எனினும் மத்திய அரசு, தானே எல்லாவற்றையும் கையிலெடுத்து நிர்வாகம் செய்வது, மாநில சுயாட்சியை தவிடுபொடியாக்குவது போன்றது. 

இதன் மூலம் மத்திய அரசு தனி ராஜாங்கத்தை செயல்படுத்த கூடாது. கடந்த ஒருவருடகாலமாக அண்ணாமலை, அர்ஜூன் சம்பத் ஆகியோரின் அறிக்கைகள் ஒரு மலிவான அரசியல் நடத்துவது போல இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதார நெருக்கடிகளைப் பயன்படுத்தி மீனவர்கள் பிரச்னை மற்றும் இலங்கைத் தமிழர்கள் நலன் குறித்து தீர்க்கப்படாத பல பிரச்னைகளை அழுத்தம் கொடுத்து சரி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். 

கடந்த கால இந்தியப் பிரதமர்களுக்கு கிடைக்காத ஒரு வாய்ப்பு இப்போது உள்ள பிரதமர் மோடிக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்டை நாட்டிற்கு உதவுவது பாராட்டுக்குரிய விஷயம் என்றாலும், 40 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னைகளை கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி தீர்க்க முற்பட வேண்டும்.

Find Us Hereஇங்கே தேடவும்