தமிழுக்கு தலைகுனிவு என்றால் அதை புதுவை அரசு ஏற்காது - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழுக்கு தலைகுனிவு என்றால் அதை புதுவை அரசு ஏற்காது - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழுக்கு தலைகுனிவு என்றால் அதை புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கம்பன் 55 ஆம் ஆண்டு விழா இன்று தொடங்கி 3 நாட்கள் வரை நடைபெறுகிறது. இதனையடுத்து கம்பன் கலையரங்கில் தொடக்க விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன் கம்பன் வடமொழியை படித்து கம்பராமாயணம் எழுதியுள்ளார். தாய்மொழி தான் உயிர் அதை முழுமையாக படிக்காமல் பிற மொழிகளை திட்டுவது தவறு. பிற மொழிகள் கற்பது தவறு இல்லை. தமிழ் விளையாடும் மாநிலமாக புதுச்சேரி திகழ்வதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “ஜிம்பரில் தமிழ் இல்லை என கூறி அரசியலாக்கி சிலர் போராட்டம் நடத்துவதால் அது நோயாளிகளுக்கு தொந்தரவாக உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழுக்கு தலைகுனிவு என்றால் அதை புதுச்சேரி அரசு ஏற்றுக்கொள்ளாது. தமிழை உயிராய் கருதும் நாம் பிற மொழிகளை நிந்திக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.

Find Us Hereஇங்கே தேடவும்