"மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது என்பது போல திமுக குணம் மாறாது" எம்.ஜி.ஆர் பாடலை பாடி திமுகவை கலாய்க்கும் செல்லூர் ராஜூ

திமுக செய்து வரும் அராஜகங்களை எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றை மேற்கொள்காட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலாய்க்கும் விதமாக பேசியுள்ளார்.

மதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்து பேசினார். அப்போது பேசுகையில் “மதுரை மாநகராட்சியில் நேற்று நிகழ்ந்த சம்பவம் வேதனையை அளிக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்தார்.முதல்வர் மு.க ஸ்டாலின்  தமிழகத்தில் குண்டர்கள் ஒழிக்கப்படுவார் என கூறி

ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள் மதுரை மாநகராட்சியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களை திமுக குண்டர்களை வைத்து தாக்கி இருக்கின்றனர். மதுரை மாநகராட்சியில் நிகழ்ந்த இந்த சம்பவம் வரலாறு பிழை. மேலும், திமுகவை சேர்ந்த குண்டர்கள் எப்படி மேயர் அறைக்குள் வந்தார்கள் என கேள்வி எழுப்பினார். மதுரை மாநகராட்சி ஆணையாளர் தூய்மை பணியாளர்கள் பணி, மக்கள் நலப் பணிகள் என நிகழும் எதையும் கண்டு கொள்வதில்லை.மதுரை ஆணையருக்கு வேலை செய்ய விருப்பமில்லாமல் இருக்கிறார் என நினைக்கிறேன். இதற்கிடையில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். தொடர்ந்து பேசிய அவர் மூன்று மாமன்ற கூட்டம் முடிந்த நிலையில் தற்பொது வரை அதிமுகவினருக்கு இடம் ஒதுக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த விவகாரம் குறித்து கவுன்சில் செயலாரிடமும் கூறினேன். மாநகராட்சி ஆணையரிடமும் பலமுறை முறையீட்டு உள்ளேன். ஜனநாயக முறைப்படி அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். மேலும், திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதைத்தான் வலியுறுத்தி இருக்கின்றனர். வருகின்ற மாமன்ற கூட்டத்திற்கு முறையாக கவுன்சில் செயலாளர் அழைக்க வேண்டும். ஆனால் அழைப்பு விடுக்காமல் அவர் என்ன பூ பறிக்க செய்கிறாரா?? என்று கேள்வி எழுப்பினார்.

உள்ளாட்சி பணிகளில் உறவினர்கள் தலையீடக் கூடாது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியிருந்தார். பின் எப்படி மதுரை மாநகராட்சி மேயர் அறைக்கு திமுகவினர், கணவர் எப்படி வந்தார்கள் முதல்வரின் வாக்குக்கு எதிராக மதுரை மாநகராட்சி  நடக்கிறதா? மேயர் அலுவலகத்திற்கு பல்வேறு தரப்பினர் வருவார்கள். ஆனால் எப்படி அங்கு ரவுடிகள் வந்தார்கள்? கூட்டுறவு சங்கங்களில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அதிகாரம் கொடுக்காமல் உள்ளனர். தொடர்ந்து பேசிய அவர் ”மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது என்பது போல திமுக குணம் மாறாது” கடந்த  சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் திமுகவை நம்பி அவர்களுக்கு வாக்கு அளித்தனர். மேலும், கலைஞர் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி  நிறைவேற்றும் என்று நம்பித்தான் திமுகக்கு வாக்கு அளித்தனர். ஆனால் அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்து வருகிறது இந்த திமுக ஆட்சி. அடிமைபெண் படத்தில் வருவதுபோல் மக்களோடு மக்களாக இருந்து மாளிகை பார்க்க வேண்டும். ஆனால் திமுக அதை செய்யவில்லை. திமுகவினர் நிறைய சொன்னார்கள் ஆனால் மக்களுக்கு ஏதும் செய்யவில்லை.

மக்களின் தேவைக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். முறையாக திட்டத்தை காட்டினால்தான் உலக வங்கியில் கடன் பெற முடியும். நாங்களா வீட்டுக்கு எடுத்துச் சென்றோம் மக்களுக்காக கடன் வாங்கினோம் என்று எங்களை சொன்னார்கள். ஆனால் தற்போது வரை திமுக அரசு 200 கோடிக்கு கடன் வாங்கி உள்ளது. மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவித்த திட்டங்களை ஒப்பந்த நிறுவனங்கள் நிறுத்தி வைத்து உள்ளன. இரண்டு திமுக அமைச்சர்கள் முறையாக செயல்படுத்தாவிட்டால் மதுரையில் உள்ள 5 அதிமுக எம்.எல்.ஏக்கள் முன்னின்று  நிறைவேற்றிக்காட்டுவோம் என நான் திமுகவிற்கு சவால் விடுகிறேன்” என்று கூறினார்.

Find Us Hereஇங்கே தேடவும்