முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்..

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்..

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்துள்ளது. 

அரசு வேலை வாங்கி தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர் சுதாகரன் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக புகார் எழுந்த்தது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தான் எந்த வேளையிலும் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்த ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில் தலைமறைவானார். பின்னர் உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜியை பிடிக்க விருதுநகர் காவல்துறை 8 தனிப்படைகள் அமைத்து தேடிவந்த நிலையில் பெங்களூருவில் வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர் சுதாகரன் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் “அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உதவியாளரான சுதாகரன் அமைச்சரிடம் கூறி அரசு வேலை வாங்கிதருவதாக கூறினார். இதனால் அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பெற்றுக்கொண்டு தலைமை செயலகத்தில் வழங்கியுள்ளார்.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வாங்கிதராமல் இருந்ததால் எழுந்த சந்தேகத்தின் பேரில் அவரது உதவியாளர் சுதாகரன் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோரிடம் கேட்டபோது நான் பணத்தை அமைச்சரிடன் கொடுத்துவிட்டேன். நீ அவரிடம் போய் பெற்றுக்கொள். மீண்டும் பணம் கேட்டு இங்கு வந்தால் ஆள் வைத்து கொலை செய்து கூவத்தில் புதைத்துவிடுவேன் என கூறி மிரட்டிகிறார்கள். எனவே அரசு வேலை வாங்கிதருவதாக கூறி ரூ.2 கோடி வரை மோசடி செய்தமுன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது நேர்முக உதவியாளர் சுதாகரன் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுத்து பணத்தை பெற்று தரவெண்டும் என கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Find Us Hereஇங்கே தேடவும்