பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவற்றவில்லை என்றால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை - ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை  நிறைவற்றவில்லை என்றால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை - ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டத்தை  நிறைவற்றவில்லை என்றால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து தமிழக நிதி அமைச்சர் கூறிய நிலையில் இதுகுறித்து சென்னை திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்  ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதையடுத்து பத்திரிகையாளர் சந்தித்த ஜாக்டோ -ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கினைப்பாளர் செல்வம், கடந்த ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது. அந்த போராட்டங்களில் இன்றைய முதல்வர் பங்கேற்று திமுக அரசு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என முதலில் அறிவித்திருந்தார். ஆனால் நிதி அமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என கூறுவதை ஏற்க் முடியாது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் வகையில் தங்களை முதல்வர் அழைத்து பேச வேண்டும். திமுக தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதை அரசு நிறைவேற்ற வேண்டும். அதில் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் அதற்கான தீர்வுகளை தர தாங்கள் தயாராக உள்ளோம்.

இந்நிலையில், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் மட்டும் இல்லாமல் நேரிலும் வாக்குறுதி அளித்துள்ளனர். எனவே அதை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யப்படும். மேலும், நிதி அமைச்சர் கூறியதை முதல்வர் தெளிவுப்படுத்த வேண்டும் என முதல்வருக்கு கடிதம் கொடுக்க உள்ளோம் என்றும் தங்களுடைய கோரிக்கை நிறைவற்றவில்லை என்றால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. எனவே மே மாதம் இறுதிக்குள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்