ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்; சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம் - கர்நாடக முதல்வர்

தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்ப்போம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய நதிகளான கிருஷ்ணா மற்றும் காவிரி நதிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை, மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு ஜனவரி இறுதியில் மேலும் ஒரு கூட்டத்தை நடத்திய பிறகு பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தமிழக அரசின் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தாங்கள் எதிர்ப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்