ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்- துரைமுருகன்

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்- துரைமுருகன்

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்- துரைமுருகன்

காவிரி – ஒகேனக்கல் 2வது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒகேனக்கல் திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என கூறிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சருக்கு துரைமுருகன் இன்று பதிலறிக்கை வெளியிட்டுள்ளார் அதில், 

குடிநீர் தேவைக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம் என தெரியவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும் சரி சட்டப்பூர்வமான அடிப்படையிலும் சரி தமிழகத்திற்கு ஒகேனக்கல் இரண்டாவது குடிநீர் திட்டத்தை ஆரம்பிக்கும் உரிமை உண்டு என்றார். 

இந்திய மற்றும் தமிழகத்தின் நீர்வள கொள்கைகளின் படி குடி நீர் தேவைக்குத் தான் முதலிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஒகேனக்கல் 2 வது குடிநீர் திட்டம் நிச்சயம் நிறைவேறும் என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

Find Us Hereஇங்கே தேடவும்