கோவா முன்னாள் முதல்வர் பர்சேகர் பாஜாக விலிருந்து விலகல்!

கோவா முன்னாள் முதல்வர் பர்சேகர் பாஜாக விலிருந்து விலகல்!

கோவா முன்னாள் முதல்வர் பர்சேகர் பாஜாக விலிருந்து விலகல்!

வரும் சட்டசபை தேர்தலில் பாஜக., வால் சீட் மறுக்கப்பட்ட கோவா முன்னாள் முதல்வரும், பாஜக., மூத்த தலைவருமான லஷ்மிகாந்த் பர்சேகர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லஷ்மிகாந்த பர்சேகர் தற்போது கோவா பாஜக., தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராகவும், கட்சியின் மையக் குழு உறுப்பினராகவும் உள்ளார். 

2022 முதல் 2017 பர்சேகர் வெற்றி பெற்ற மாண்ட்ரேம் சட்டசபை தொகுதிக்கான வேட்பாளராக சிட்டிங் எம்.எம்.ஏ., தயானந்த் சோப்டேவை பாஜக., அறிவித்துள்ளது. 

சோப்டே 2017 கோவா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்து பர்சேகரை தோற்கடித்தார், ஆனால் 2019 இல் அவர் பாஜக.,வில் இணைந்தார். 

ராஜினாமா முடிவு குறித்து அறிவித்துள்ள பர்சேகர், ‘இப்போது நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பின்னர் முடிவு செய்வேன் என்றார். மேலும், மாண்ட்ரேமில் உள்ள உண்மையான பாஜக., தொண்டர்களை புறக்கணித்து வருகிறார், இதனால், அவர்களிடையே பெரிய அளவில் அதிருப்தி நிலவுகிறது என்றார்.

Find Us Hereஇங்கே தேடவும்